ஓய்வூதியத் திணைக்கள வளாகத்துக்குள் பொதுமக்களின் வருகை – இடைநிறுத்தம்!
ஓய்வூதியத் திணைக்கள வளாகத்துக்குள், பொதுமக்கள் வருகை தருகின்றமை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வருகை தரும் அனைவரினதும் வருகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றும் , நாளையும், நாளை மறுதினமும் இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது
இந்த நிலையில், ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.