
ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற இந்தியர்கள் குழு? சஜித்துக்கு பதிலடி கொடுத்த இராணுவத் தளபதி
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு தனிமைப்படுத்தப்படாமல் இந்தியர்கள் குழு ஒன்று அழைத்து வரப்பட்டதாக வெளியான செய்திகளை இராணுவத் தளபதி இன்று மறுத்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று ஊடகங்களுக்கு உரையாற்றியபோது இதை தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்ததாகவும், அப்படி எதுவும் இல்லை என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல் பார்வையிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் மனுஷ நாணயக்காரவும் இன்று நாடாளுமன்றத்தில், “இந்தியர்கள் குழு மத்தள விமான நிலையத்திற்கு வந்து, மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே “அப்படி யாரும் வரவில்லை. இது பொய்யான தகவல் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.