குருநாகலில் மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி

குருநாகலில் மற்றுமொரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி

மினுவாங்கொட - ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாகல் - உயன்தன பகுதியில் வசிக்கும் ஒருவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் என்.பரீத் தெரிவித்தார்.

28 வயதான குறித்த நபர் தனது மனைவியுடன் குருநாகல் உயன்தனவின் கெமுனு மாவத்தையில் வசித்து வந்துள்ளார்.

இவர் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து பின்னர் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இதற்போது குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக டாக்டர் பரீத் கூறினார்.

அவர் நிறுவனத்தில் இருந்து விடுமுறை எடுத்து கடந்த மாதம் 25 ஆம் திகதி குருநாகலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் சிகிச்சை பெற 3 ஆம் திகதி உயன்தன பகுதியில் உள்ள ஒரு தனியார் சிகிச்சை மையத்திற்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.