மின் கட்டணம் செலுத்தச் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

மின் கட்டணம் செலுத்தச் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

ஹோமாகமை மின்சார சபை அலுவலகத்தில் மின் கட்டணத்தை செலுத்தி விட்டு திரும்பிக்கொண்டிருந்த ஒருவர் அந்த அலுவலகத்தின் வளவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோகந்தர சிங்கப்புர இலக்கம் 174 என்ற முகவரில் வசித்து வந்த ஏ.எச். கருணாரத்ன என்ற 59 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்சார சபையின் அலுவலகத்திற்கு மின் கட்டணத்தை செலுத்த வந்திருந்த சிலர், தரையில் விழுந்த இந்த நபரை ஹோமாகமை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகமை திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளார்.

உயிரிழந்தவரின் மரணப் பரிசோதனைகளை ஹோமாகமை திடீர் மரண விசாரணை அதிகாரி சிந்தக உதயகுமார இன்று ஹோமாகமை திடீர் மரண விசாரணை நீதிமன்றத்தில் நடத்தவுள்ளார்.