வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட நடவடிக்கை!
கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேலதிக வாகன தரிப்பிடங்களை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரில் மேலதிகமாக எட்டு வாகன தரிப்பிடங்கள் நிர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு ஆணைக்குழு அமைந்துள்ள பகுதிக்கு பின்புறமாக குறித்த வாகன தரிப்பிட கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
10 அடுக்குமாடிகளை கொண்ட பகுதியில் 252 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய அளவில் வாகனத்தரிப்பிடம் நிர்மானிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
சுமார் ஆயிரத்து 113 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை குறித்த கட்டடத்தின் தரை தளத்தில் 5 மாடிகளைக் கொண்ட வர்த்தக தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் 7 வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பணிகள் எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.