நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் ஆபத்தானது..!!
பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் தற்சமயம் எற்பட்டுள்ள நிலையானது தீவிரமானது என தேசிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களிடையே வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஏற்கனவே நாட்டில் காணப்பட்ட கொரோனா தொற்றினை விட தற்சமயம் உள்ள கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.