காவற்துறை பொது மக்களுக்களிடம் விடுத்துள்ள அறிவுறுத்தல்..!

காவற்துறை பொது மக்களுக்களிடம் விடுத்துள்ள அறிவுறுத்தல்..!

காய்ச்சல் உள்ளிட்ட கொவிட்-19 தொற்று அறிகுறி இருப்பின் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்று ஆலோசனை பெறுமாறு அரசாங்கம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறான நோய் அறிகுறிகளை மறைத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா, வெயாங்கொடை, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய காவற்துறை பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அந்த காலப்பகுதியில் குறித்த காவற்துறை பிரிவுகளை சேர்ந்த சகலரும் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அந்த காவற்துறை பிரிவுகளுக்குள் பிரவேசிக்க மற்றும் வெளியேற முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாhக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நாட்டின் எந்த பாகத்தில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் கோரியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவௌ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.