அரச வைத்தியசாலைகளுக்கு செல்லுங்கள் -பொதுமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.