க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வடக்கில் இருந்து 20,325 மாணவர்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வடக்கில் இருந்து 20,325 மாணவர்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் இருந்து 116 பரீட்சை நிலையங்களிலும் 20 ஆயிரத்து 325 மாணவர்கள் தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்களில் 16 ஆயிரத்து 949 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 3 ஆயிரத்து 379 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

இதேநேரம் 11ஆம் திகதி நடைபெறும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் 212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.