சுஷாந்த் சிங்கின் ஆசைகள் 50.... நிறைவேறாமல் போனது

சுஷாந்த் சிங்கின் ஆசைகள் 50.... நிறைவேறாமல் போனது

பவித்ரா ரிஸ்தா என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த கை போ சே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 2016-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  திரைப்படத்தில் அவரது அபார நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. 

சுஷாந்த் சிங்கின் 50 ஆசைகள்

தோனியின் ஸ்டைல், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்டமுறை என்று அவரின் அனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். அப்படத்தில், இளைஞர்கள் வாழ்வில், தங்களது ஆசையையும், லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்திய நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுஷாந்த் சிங்கின் 50 ஆசைகள்

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த், கடந்த 2019-ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், விண்வெளி குறித்து அறிந்துகொள்ள 100 சிறு குழந்தைகளை நாசாவுக்கு அனுப்ப வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், ஆயிரம் மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் கற்க வேண்டும், லாம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும்,  இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார். 

 

சுஷாந்த் சிங்

தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகளை கடந்தாண்டே நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 27ம-ந் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.