
ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளருக்கும் கொரோனா
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மாத்தளை, இஹெலபொல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் கம்பஹா - திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை குறித்த தொழிற்சாலையில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைடுத்து தொழிற்சாலையின் முகாமையாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.