மீண்டும் இணையும் ‘வாலு’ கூட்டணி

மீண்டும் இணையும் ‘வாலு’ கூட்டணி

விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் பின்னர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்கள் வெளியாகின. தற்போது அவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு - விஜய் சந்தர் கூட்டணி டெம்பர் எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைவதாக இருந்து, சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. சிம்பு கைவசம் வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம், மஹா போன்ற படங்கள் உள்ளன.