இலங்கையில் 3 இலட்சத்தை அண்மிக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை

இலங்கையில் 3 இலட்சத்தை அண்மிக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை

இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 501 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா வைரஸ்  தொற்று உள்ளமை கடந்த 4ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவரது மகளுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் அவருடன் தொழில் புரிந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவரது மகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்தோடு, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.