குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, குடிவரவு , குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் ஒன்பதாம் திகதிகளில், திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திணைக்களத்தின் வழமையான அலுவலக நேரத்தில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலுவலக நேரமான முற்பகல் 8.00 மணி முதல் 4.30 வரையான காலப்பகுதியில், தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.