வவுனியாவில் கொரோனா சந்தேகம்? – குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!
மினுவாங்கொடை தொழிற்சாலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவரிடம் தொடர்பினை வைத்திருந்த குடும்பமொன்று வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மினுவாங்கொடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர், அண்மையில் குறித்த குடும்பத்தை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த குடும்பத்தை தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.