இலங்கையின் பல இடங்களிலும் உள்ள 495 பேரைத் தேடி களமிறங்கிய இராணுவம்! இராணுவத் தளபதி

இலங்கையின் பல இடங்களிலும் உள்ள 495 பேரைத் தேடி களமிறங்கிய இராணுவம்! இராணுவத் தளபதி

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மிகவும் எளிதான முறை என்றாலும், இலங்கை மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாடாக இது அமையும். இதுவும் ஒரு அடக்குமுறை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை அளித்த நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று பரவலுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால், அதற்கான சரியான பதில் ஊரடங்கு இல்லை.

பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கட்டுப்படுத்தி முறையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

முதலாவதாக பாதிக்கப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டதால் மூன்று பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

குறித்த பகுதிகளில் இருந்து அதிகளவான மக்கள் வேலைக்கு செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,

“மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1400 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 400 பேர் சுத்தம் செய்யும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் உள்ளனர்.

அந்த 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் முகவரிகளைக் கொண்டவர்கள். அவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் அடையாளம் காணும் நடவடிக்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என இராணுவத் தளபதி தெரிவித்தார்.