ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களின் வீடுகளுக்கே வரும் உணவுப்பொருட்கள்

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களின் வீடுகளுக்கே வரும் உணவுப்பொருட்கள்

கம்பஹா- வெயாங்கொட, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலர் உணவுப்பொருட்களை வழங்க வேண்டிய தேவையேற்படின் கடந்த காலங்களைப் போல, கிராம மட்டங்களுக்குச் ​சென்று, விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜயலத் பெண்ணுடன் தொடர்புகளை பேணிய பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே கம்பஹா- வெயாங்கொட, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவை ஏற்படின் ஏனைய பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது