கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய பலர் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 40 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்த்தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் பொலிஸார் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக திவுலபிட்டிய, மினுவன்கொட மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட சுமார் 40 பேரை கைது செய்துள்ளதாக பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.