தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!

 

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 20 மாணவர்களை பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் வரை தனிமைப்படுத்தி வைத்திருக்க முடிவ எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்துக்கமையவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 20 மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

தனித்தனி தனிமைப்படுத்தல் இடங்களை மாணவர்களுக்காக தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் யாருக்காவது கொவிட் 19 தொற்று இனங்காணப்பட்டால் அவர்களுக்காக ஒரு தனிமைப்படுத்தல் பிரதேசத்தை தயார்படுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அறிவுறுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.