நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,473 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 02 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் இவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களை குருநாகல் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மினுவங்கொட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியர்கள் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 201 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.