தேவையற்ற பயணங்களை நிறுத்துங்கள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தேவையற்ற பயணங்களை நிறுத்துங்கள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மினுவாங்கொடை அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியரகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் வெளியான பி.சி.ஆர். சோதனைகள் முடிவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் மொத்தக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3,471 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் சமூக மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் வீரியத்தன்மையை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்கள் கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சமூக இடைவெளியினை பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக் கவசங்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.