சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா..!திவுலுப்பிட்டிய பகுதியின் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது

சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா..!திவுலுப்பிட்டிய பகுதியின் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது

திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று மேற்கொள்ளபட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய கம்பஹா - திவுலுப்பிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய, பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.