
ஸ்ரீலங்காவில் மீண்டும் கொரோனா! கட்டுநாயக்க விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
ஸ்ரீலங்காவில் கொரோனா நோய்த் தொற்று பரவுகை அச்சம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றாளி கண்டு பிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் சில கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு உயர்மட்ட முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக விமான நிலைய பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, விமான நிலையத்தில் உள்நுழைதல் மற்றும் வெளியேறல் பகுதிகளில் காணப்படும் தீர்வையற்ற கடைகளுக்கு பயணிகள் பிரவேசிப்பது மறு அறிவித்தல் வரையில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் உள்நுழைதல் மற்றும் வெளியேறல் பகுதிகளில் பயணிகளுடன் வரும் அவர்களது விருந்தினர்களின் வருகையும் தடை செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே விமான நிலையத்தின் பயணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் முழு அளவில் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.