மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினம் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

யுக்ரைன் நாட்டை சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்இ ஐக்கிய அரபு ராச்சியத்தில் வருகை தந்த கடலோடி ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன்இ ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்களுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளைஇ திவுலபிட்டியில் நேற்று பெண்ணொருவருக்கு கொவிட்-19 தொற்றுறதியானதோடு அவரது 16 வயது மகளுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதியான மூவாயிரத்து 258 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.