கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் மற்றும் அரசுக்கு மக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்கினால், அதனை கட்டுப்படுத்தி, துரிதமாக புதிய நிலைமைக்கு செல்ல முடியும் என விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்குக்கும் தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரண்டு மாதங்களுக்கு பின்னர் இலங்கையில் சமூகத்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தொற்றாளருடன் பழகியவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உடலில் தேவையான இடங்களில் எதிர்காலத்தில் பீ.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும்.

நாம் வைரஸ் ஒன்றுடன் போராடி வருகிறோம். அது எமது கட்டுப்பாட்டை மீறி சமூகத்திற்குள் பரவக்கூடும். இது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

தேவையற்ற நடமாட்டத்தை குறையுங்கள். சமூகத்திற்குள் வரும் போது இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசத்தை அணியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள். ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் எனவும் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.