விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள்

விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள்

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த நாள் இந்த ஆண்டு 22, ஆகஸ்ட் கொண்டாடப்படவுள்ளது.

* விநாயகரை வழிபடவும், அவருக்கான பூஜை சடங்குகளைச் செய்யவும் முதல் கட்டமாக விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வர வேண்டும்.

 


* வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும்.

* சிலையை இல்லத்தில் வைத்து அதற்கான மந்திரத்தை கூற வேண்டும். பிறகு விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும்.

* அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, விநாயகரை வழிபட வேண்டும்.

* பின்னர் அவருக்கு பூக்கள், பழங்கள் , பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை "மோதகப் பிரியன்" என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம் . அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம்.

* விநாயகர் துதிகளை பாடி அவரை மகிழ்விக்கலாம் .

* பின்னர் ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

* அதன் பிறகு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம்.