யாழ். அரியாலை கடற்பரப்பில் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ். அரியாலை கடற்பரப்பில் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ். அரியாலை கடற்பரப்பில் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவு இன்று யாழ். அரியாலைப் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது கடற்படை நடவடிக்கை காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாது கைவிடப்பட்ட படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 பொதிகளில் இடப்பட்டிருந்த சுமார் 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தற்போதைய பெறுமதி 68 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.