தலைமை பயிற்சியாளர் பதவி: முறைப்படி விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட்

தலைமை பயிற்சியாளர் பதவி: முறைப்படி விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையோடு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

 

இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகளாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு இருந்ததால், மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் ராகுல் டிராவிட் முறைப்படி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகாமல் இருந்தது.

 

இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு வி.வி.எஸ். லக்‌ஷ்மண் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.