பிரான்சில் தூக்குத் தண்டனை நிறுத்தம் (அக். 9- 1981)

பிரான்சில் தூக்குத் தண்டனை நிறுத்தம் (அக். 9- 1981)

மிகக் கொடுமையான குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகள் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல நாடுகள் தூக்குத் தண்டனை ரத்து செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1799 - லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் 1,200,000 டாலர் பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.

 

மிகக் கொடுமையான குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகள் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. பல நாடுகள் தூக்குத் தண்டனை ரத்து செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1799 - லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் 1,200,000 டாலர் பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது. * 1804 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது. * 1806 - பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது. * 1820 - கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1831 - கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார். * 1835 - கொழும்பு ராயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. * 1854 - ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.

* 1871 - மூன்று நாட்களுக்கு முன்னர் சிகாகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். * 1888 - வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. * 1910 - மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார். * 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. * 1934 - யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான். * 1941 - பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார். * 1962 - உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1963 - வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.