பொல்லொன்றினால் தாக்கி பெண்ணொருவர் கொலை

பொல்லொன்றினால் தாக்கி பெண்ணொருவர் கொலை

வெலிமடை - மெதஹின்ன பிரதேசத்தில் பொல்லொன்றினால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கந்தேஹெல கொடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் 33 வயதான நபர் ஒருவருடன்  திருமணத்துக்கு அப்பாலான உறவை பேணி வந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அந்நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பகஸ்தோவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.