சுயஇன்பம் பெட்டர்: ரசிகரின் கேள்விக்கு போல்டான பதிலளித்த ஓவியா

சுயஇன்பம் பெட்டர்: ரசிகரின் கேள்விக்கு போல்டான பதிலளித்த ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் ஏராளம் என்பதும் அவர் டுவிட்டரில் எந்த பதிவு செய்தாலும் அதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவியும் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று பகுதிகளிலும் சேர்த்து அனைவருக்கும் பிடித்த ஒரே போட்டியாளர் ஓவியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓவியா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் சில சுவாரஸ்யமான கேள்விகளும் சர்ச்சைக்குரிய கேள்விகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பிய ஒரு ரசிகர், ‘ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதை விட சுய இன்பம் பெட்டர் என்று கூறி அதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு ஓவியா ’உண்மை’ என்று பதிலளித்துள்ளார்

மேலும் உங்கள் வருங்கால கணவர் குறிதது உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? என்ற கேள்விக்கு ’எனக்கு கணவர் என்று யாரும் தேவையில்லை என்று பதிலளித்துள்ளார். மேலும் ’உங்களுடைய பள்ளி வாழ்க்கை குறித்து கருத்துக் கூறுங்கள்’ என்ற கேள்விக்கு, ‘நான் என் வாழ்க்கையில் பணம் மற்றும் காலத்தை வீணடித்தது பள்ளி வாழ்க்கையில் தான்’ என்று கூறியுள்ளார்

மேலும் தற்போது நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படம் எது என்ற கேள்விக்கு ’ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அரசியலுக்கு ஓவியா எப்போது வருவார்? என்ற கேள்விக்கு ’தேவைப்பட்டால் வருவேன்’ என்று கூறியுள்ளார். ஓவியாவின் இந்த சுவாரஸ்யமான பதில்கள் வைரலாகி வருகின்றன.