யாழ்.மாநகர காவல் படையின் சீருடை - நாடாளுமன்றிலும் கேள்விக்கணை

யாழ்.மாநகர காவல் படையின் சீருடை - நாடாளுமன்றிலும் கேள்விக்கணை

யாழ். மாநகரத்தில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக யாழ் மாநகர மேயரினால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரத்தில் போக்குவரத்து நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்பட்ட நீல நிற சீருடை அணிந்திருந்தவர்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கிங்ஸ் நெல்சனினால் இன்று சபையில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டிருந்த காவற்துறையினரைப் போல் இவர்களுடைய சீருடையும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், பொலிஸாருக்கு அப்போது பணிகள் இல்லையா என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இன்று மாலை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடத்தப்படவுள்ள பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் கலந்துகொண்டு வினவும்படி ஆலோசனை கூறினார்.