வாட்டி வதைக்கும் வெயில்... இன்னும் அதிகரிக்குமாம்!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து பல மாவட்டங்களில் சதமடித்துள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.