கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876

கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான். * 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப்

 

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான். * 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர். * 1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார். * 1902 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.

* 1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது. * 1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார். * 1918 - முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது. * 1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது. * 1951 - கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர். * 1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.

* 1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர். * 1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. * 2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.