காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படமாட்டாது - டக்ளஸ் தேவாநந்தா

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படமாட்டாது - டக்ளஸ் தேவாநந்தா

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படமாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

காணி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தினை, அநுராதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதால் மக்களுக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தும் என இந்த கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காணி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுடன், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தொலைப்பேசி ஊடாக தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவினது காரியாலயம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலேயே இயங்கும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.