சத்தியமா விடவே கூடாது: அநீதிக்காக குரல் கொடுத்த சூப்பஸ்டார்!

சத்தியமா விடவே கூடாது: அநீதிக்காக குரல் கொடுத்த சூப்பஸ்டார்!

சாத்தான்குளம் பகுதியில் பொலிஸாரால் தந்தையும் மகனும் மிருகத்தனமாக கொல்லப்பட்டமை தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது - சத்தியமா விடவே கூடாது என குறிப்பிட்டுள்ளார்.