இன்றைய ராசி பலன்கள் 4/3/2021

இன்றைய ராசி பலன்கள் 4/3/2021

மேஷம்

நம்பிக்கைகள் நடைபெறும்நாள். உத்தியோக மாற்றம் பற்றிச்சிந்திப்பீர்கள். உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்

ரிஷபம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே பதவி உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்

மிதுனம்.

வாய்ப்புகள் வந்து சேர வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்

கடகம்

யோகமான நாள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வீடு கட்டவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

சிம்மம்

வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்

கன்னி

கடன்சுமை குறையும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

துலாம்

ணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு

விருச்சகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்

தனுசு

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

இனிமையான நாள். நல்லவர்களின் நட்பால் நாணயப் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்

கும்பம்

சகோதர வழியில் நன்மை ஏற்படும் நாள். முன்னேற்றத்தில் இருந்த தடை அகலும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடனுக்குடன் காரியம் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.