கிளைமோர் குண்டுகளுடன் இருவரை கைது செய்த காவல் துறையினருக்கு பணப்பரிசு..!

கிளைமோர் குண்டுகளுடன் இருவரை கைது செய்த காவல் துறையினருக்கு பணப்பரிசு..!

பொலநறுவையில் அமைந்துள்ள இயற்கை நீர்வளம் மிக்க பூங்கா ஒன்றினூடாக வீதியொன்றினை அமைக்கவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக குறித்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க பதிலளித்திருந்தார்.

அத்துடன் கிளிநொச்சி பகுதியில் கிளைமோர் குண்டுகளுடன் இருவரை கைது செய்த காவல் துறையினருக்கு விசேட பதவி உயர்வு மற்றும் பணப்பரிசு வழங்கவுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.