ஸ்ரீலங்காவில் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ள மக்களுக்கான சேவை

ஸ்ரீலங்காவில் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ள மக்களுக்கான சேவை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்பட்ட மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறாதென தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவினருடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைய அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மருந்துகளை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மருந்துகளை தொடர்ந்தும் விநியோகம் செய்யுமாறு சுகாதார பிரிவினரும் நுகர்வோரும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கமைய, எதிர்காலத்தில் புதியதொரு முறைமையின் கீழ் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

லைப்ஸ்டைல் செய்திகள்