ஈரானில் திறக்கப்பட்ட எல்லைகளை மீண்டும் மூடுவதற்கு தீர்மானம்..!

ஈரானில் திறக்கப்பட்ட எல்லைகளை மீண்டும் மூடுவதற்கு தீர்மானம்..!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஈரானின் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் மட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான 107 பேர் உயிரிழந்ததை தொடர்ந்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானில் இதுவரையான காலப்பகுதியில் 187,427 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 8,837 பேர் குறித்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.