மேல்மாகாணத்தில் காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை- 902 பேர் கைது
மேல் மாகாணத்தில் உள்ள 104 காவல்நிலையத்தைச் சேர்ந்த காவற்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6.00 மணி தொடக்கம் குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 387 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 229 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 286 நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரையும் இன்று நீதி்மன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.