நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  ஐந்து பேரும் கடற்படை உறுப்பினர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் கற்பிட்டி தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை உறுப்பினர்கள் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 35 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 591 பேர் நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.