கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உயரதர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பில் மீள ஆராயவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை மாணவர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதை தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் ஆராயப்படவுள்ளதாக அவர் எமது ஹிரு செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சைகளை செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கல்வியமைச்சர் டளஸ் அலகப்பெரும சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர், உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பில் மீள ஆராயப்படவுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.