மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 417 பேர் கைது!
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் நேற்று அதிகாலை 5 மணிமுதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஞ்சா போதைப்பொருள் மோசடி தொடர்பில் 103 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 88 பேரும் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை மேல்மாகாணத்துக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கொன் வழங்கியுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.