பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய 129 பேர்

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய 129 பேர்

கொரோனா காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த 129 பயணிகள் இன்று அதிகாலை நாட்டுக்கு அடைத்துவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

 

இந்நிலையில், நாடு திரும்பிய அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.