கடந்த ஆகஸ்டு மாதம் 8 முக்கிய தொழில்களின் உற்பத்தி 8.5 சதவீதம் வீழ்ச்சி

சிமெண்டு, மின்சாரம் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 8.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதுடெல்லி

நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமெண்டு, மின்சாரம் ஆகிய 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 8.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்தில் 0.2 சதவீதம்தான் வீழ்ச்சி காணப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை இத்தொழில்களின் உற்பத்தியில் மொத்தம் 17.8 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.