
இலங்கை ஆபத்துக்கு தயாராக இருப்பது இன்னும் அவசியம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய போதிலும், இலங்கை இப்போது பாதுகாப்பாக இருப்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் கவனமாக இருப்பதுடன் மற்றுமாரு ஆபத்துக்கு தயாராக இருப்பது இன்னும் அவசியம் என்று தொற்றுநோயியல் பிரிவின் இயக்குநர் டாக்டர் சுதத் சமரவீர கூறினார்.
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது கூறப்பட்டது.
கொரோனா காரணமாக சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டியது அவசியம்.
இருப்பினும், இப்போது பலர் அதை மறந்துவிட்டதாக தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் டாக்டர் சுதத் சமரவீரா தெரிவித்தார்.