பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது...! பொது மக்களுக்கான எச்சரிக்கை...!

பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது...! பொது மக்களுக்கான எச்சரிக்கை...!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிக குளிசைகளை உள்ளடக்கிய இனிப்பு பண்டங்களை உண்பதற்கு கொடுத்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நுவரெலிய மற்றும் ஹட்டன் பிரதான வீதிகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளிலேயே இந்த கொள்ளைச்சம்பங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அதிக குளிசைகளை உள்ளடக்கிய இனிப்பு பண்டங்களை உட்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் நுவரெலியா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இதேவேளை ஒருகொடாவத்தை குடு பத்மினியின் உதவியாளரான பாபு என்பவர் 120,000 ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.