எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக தற்போது காணப்படும் முறைமை மாற்றப்பட வேண்டும் என பலரும் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தீர்மானத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர், சம்பள உயர்வுகளை பெற முடியாத அரச ஊழியர்களுக்கு தமது சம்பள உயர்வை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கவும், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது