இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 5 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த ஐந்து பேரும் கடற்படை உறுப்பினர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அவர்களில் மூன்று பேர் கற்பிட்டி தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை உறுப்பினர்கள் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன் 591 பேர் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 35 பேர் குணமடைந்துள்ளனர்.
 
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன் 589 பேர் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.